0
0
Read Time:1 Minute, 16 Second
தொண்டாமுத்தூர் ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 06/11/2022 ஞாயிறு காலை 11.00மணிக்கு தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனை உள் நோயாளிகள் 100 பேருக்கு 6 வது வாரமாக ரொட்டி, பால், முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் சி. வெள்ளைச்சாமி தலைமை ஏற்றார். ஒன்றிய துணைத் தலைவர் எம். ஹரிஹரன் ரொட்டி, பால், முட்டை வழங்கினார். தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவர் டாக்டர் மா. சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய துணை அமைப்பாளர் பகவதி செந்தில், ஒன்றிய நிர்வாகிகள் கே. நவீன் குமார், டி.சஞ்சய், எஸ்.வேணுகோபால், சி.வருண், ஜி. ஸ்ரீதர், ஆர்.லியோராஜ், என்.அருள்மொழி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.