மயிலாடுதுறை: ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கான கருணைத் தொகை உயர்வு
போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்தோரைச் சார்ந்தோர மற்றும் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து கருணைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 23.09.2022 முதல் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்தோரைச் சார்ந்தோர் மற்றும் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து கருணைத் தொகை உயர்த்தி வழங்கிட முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்தோரைச் சார்ந்தோருக்கு (மனைவி / பெற்றோர்) கருணைத் தொகை ரூ.2,00,000/ (ஒரு முறை மட்டும்) மற்றும் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கு கருணைத் தொகை ரூ.1,00,000/-(ஒரு முறை மட்டும்) உயர்த்தி வழங்கப்படவுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் அறை எண்.10 மற்றும் 11-ல் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (04365-299765) தொடர்புகொள்ளுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா அறிவித்துள்ளார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்