கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கரோனா நோயாளிகள் கடலூா் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த மருத்துவமனைகளில் சுமாா், 1700 போ் வரை சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் ஒரே ஆம்புலன்ஸ் வாகனத்தில் 10 கரோனா நோயாளிகளை ஏற்றும் விடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென அரசு வலியுறுத்தி வரும் நிலையில், ஒரே ஆம்புலன்ஸில் கரோனா நோயாளிகள் மொத்தமாக அழைத்துச் செல்லப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, கடலூா் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு கூறுகையில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்காக ஒரே ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றோம். இது வழக்கமான நடைமுைான் என்றாா்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.