சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக மருத்துவத் துறை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம், சிதம்பரம் அடுத்த உசுப்பூர் கிராமத்தில் மிட் டவுன் ரோட்டரி சங்க அரங்கத்தில் நடைபெற்றது.இந்த முகாமின் துவக்க விழாவில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்க துணைத் தலைவர் ஆர். செந்தில்குமார் தலைமை ஏற்று வரவேற்புரை ஆற்றினார்.
ரோட்டரி துணை ஆளுநர் எம். தீபக் குமார்முகாமின் முக்கியத்துவத்தையும் சிறப்பம்சங்களையும் எடுத்துரைத்தார். மேலும் முகாமில் உசுப்பூர் கிராம ஊராட்சி மன்ற தலைவி திருமதி தென்றல் மணி இளமுருகு, துணைத் தலைவி சந்திரா முருகன் சந்திரமோகன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ரேவதி இளவரசன் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வைத்தனர்.முகாமில் கடலூர் அரசு மருத்துவமனை சமூக மருத்துவ துறை சார்பில் டாக்டர் தேவி அவர்கள் தலைமையில் மருத்துவ குழுவினர் டாக்டர்கள் என்.அகிலன், எஸ்.சோமு, எம்.ஷிவானி மற்றும் மருத்துவ ஆண் செவிலியர்கள் மருந்தாளுநர்கள் ஆகியோர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாமில் 150பேர் பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். முகாமில் உசுப்பூர் ஊராட்சி மன்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரிசங்கத் தலைவர் முனைவர் ஜி.ராஜராஜன், சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் முனைவர் எஸ்.பிரகதீஸ்வரன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், சிதம்பரம் மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளையோடு இணைந்து முகாமிற்கான மருந்துகள் மற்றும் உபகரணங்களை ஏற்பாடு செய்திருந்தனர். முகாமில் பயனாளிகளுக்கு இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் ஆய்ந்து அறிவுரைகள் மற்றும் மருந்துகள் பரிந்துரைத்தனர்.
அனைவருக்கும் சளி இருமல் காய்ச்சல் மருந்துகளும் வழங்கப்பட்டன. முகாமிற்கு
சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்க சாசனத் தலைவர் ஞான. அம்பலவாணன் அவர்களும் பொருளாளர் எல். சி.ஆர். கே. நடராஜன் மற்றும் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க உறுப்பினர் செல்வராஜ், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் முகமது யாசின், தலைவர் ராஜசேகரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாமின் இறுதியில் டெம்பிள் டவுன் செயலாளர் முனைவர் ஹெச். மணிகண்டன் மற்றும் மிட் டவுன் ரோட்டரி சங்க செயலாளர் முனைவர் கே. சின்னையன் ஆகியோர் நன்றி கூறினர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி