தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19/ 11 /2022 காலை 10.00 மணிக்கு உலக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தின வார விழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ஜி.மாலா அவர்கள் தலைமையேற்றார். WPC லதா அவர்கள், தீபா அவர்கள்,ஆசிரியை டி.சுமதி ஆகியோர் முன்னிலையில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற சி. நிவேதா, இரண்டாம் இடம் பெற்ற கனிகா, மூன்றாம் இடம் பெற்ற அட்க்ஷயா ஸ்ரீ, கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி சி. நிவேதா, இரண்டாம் இடம் பெற்ற கவிப்பிரியா, மூன்றாம் இடம் பெற்ற அட்சயாதேவி, ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்ற ஸ்ரீயா, இரண்டாம் இடம் பெற்ற ஹெலன் கிருபா, மூன்றாவது இடம் பெற்ற தன்யா ஸ்ரீ, ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
உலக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு வார விழாவில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றத்தின் தலைவர் டாக்டர் மா. சிவக்குமார், இந்திய மனிதநேய விருதாளர் சி. ஷைனி சிவகுமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
விழா நிறைவாக பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் டி. ஆனந்த் அவர்கள் நன்றி கூறினார்.
Read Time:2 Minute, 32 Second