தரங்கம்பாடி, நவம்பர்- 21;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கேசவன் பாளையத்தில் வசிக்கும், ஏழை மாணவி சௌமியா பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 563/600 மதிப்பெண் பெற்று, மதுரை மருத்துவ கல்லூரியில் டாக்டரேட் ஆப் பார்மசிக்கான படிப்பில் சேர மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைத்தது. படிப்பிற்கான கல்வி கட்டணம் செலுத்து முடியாமல் மாணவியின் பெற்றோர் தவித்து வந்தனர்.
இந்நிலையில் மாணவியின் தாயாரும் மாணவியும், பல்வேறு சேவைகளை செய்து வரும், பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளரும், தமிழக ஹயர் கூட்ஸ்ஓனர்ஸ் அசோசியேசன் சங்கத்தின் பொருளாளரும்,
மு.கவுன்சிலருமான மாணிக்க.அருண்குமார் அலுவலகம் சென்று கல்விக்கு உதவி செய்யுமாறு கேட்டிருந்தனர்.

மாணவி சௌமியாவின் உண்மை நிலையை உணர்ந்த மு.கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் வழக்கம்போல் தனது நண்பர்களுக்கு வலைதளம் வாட்ஸ்ஆப் வாயிலாக கோரிக்கை வைத்தார். அதனை அறிந்த அமராவதிமகிபாலன், ரோட்டரி சங்கத் தலைவர் சக்திமணிகண்டன், தமிழக ஹயர்கூட்ஸ் சங்க தரங்கை தலைவர் S,R.கார்த்திகேயன், ராஜி, சதீஷ்இராமலிங்கம், ஆசிரியைமீனாட்சி ரஷ்யாபிரசன்னா,
மனோவர்ஷன், ஆதவமித்ரன் மதுமொழி, குட்டியாண்டியூர் செல்வக்குமார் சிங்கப்பூர் கிருஷ்ணன்,
அனந்தமங்கலம் ராம்குமார், உள்ளிடோர் மாணவியின் கல்விக்கு நிதி வழங்கினர்.
நண்பர்கள் வாயிலாக திரட்டப்பட்ட ரூ.20,000 நிதியை பாவலர் புலவர் ராஜமாணிக்கம், தோகா சங்கசெயலாளர் சந்தனசாமி,துனைத்தலைவர் குமார்,அங்காளஆறுமுகம், ஆர் எஸ் பி என்டர்பிரைசஸ் உரிமையாளர் செந்தில்வேல் குமரன், ஆகியோருடன், மாணிக்க.அருண்குமார் மாணவி சௌமியாவிற்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் பாவலர் இராசமாணிக்கம், சந்தனசாமி மாணவி சௌமியாவிற்கு,பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும்,நன்கு படித்து ஏழைமக்களுக்கு சேவையாற்றவும், கல்வி உதவிதொகை பெற காரணமாக இருந்த முன்னாள் கவுன்சிலர் மாணிக்க. அருண்குமாரையும் வாழ்த்தினர். உதவியை பெற்றுக்கொண்ட மாணவியின் தாயார் ஜான்சிராணி உதவி புரிந்த அனைத்து நன்கொடையாளருக்கும், பெரும் காரணமாக தோகாசங்கத்தின் பொருளாளர் பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளரும் முன்னாள் கவுன்சிலருமான
மாணிக்க அருண்குமாருக்கு நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்