0 0
Read Time:3 Minute, 13 Second

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கியின் சார்பில் நபார்டு வங்கி ஆண்டு கடன் திட்ட அறிக்கை 2023-2024 ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வெளியிட மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி பெற்றுக்கொண்டார்.

கடனுதவிகள் மற்றும் நபார்டு வங்கி ஆண்டு கடன் திட்ட அறிக்கை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
பல்வேறு வங்கியின் சார்பில் 60 பயனாளிகளுக்கு ரூ.6.50 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன. மாவட்ட தொழில் மையம் நமது மாவட்டத்தில் தொடங்கப்பட்ட உடன் அதிகமாக கடனுதவி வழங்கப்படுகிறது. அதிக விண்ணப்பங்கள் வரப்பெற்றன. மகளிர் திட்டம் சார்பில் கடந்த ஆண்டு ரூ.300 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ரூ.500 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது. தற்போது தாட்கோ அலுவலகமும் இங்கு செயல்படுகிறது. வளர்ந்த மாவட்டத்தை நோக்கி பயனிக்கிறோம்.
அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும்.

இங்கு கடன் பெற்ற பயனாளிகள் உங்கள் தொழில் வளத்தை பெருக்கி பெற்ற கடனை திருப்பி செலுத்த வேண்டும். நீங்கள் வங்கிகளுக்கு சிறந்த வாடிக்கையாளராக இருக்கவேண்டும். நீங்கள் அடுத்த வாடிக்கையாளரை வங்கிக்கு அழைத்துவர வேண்டும். வங்கியில் பெற்ற கடன் மூலம் இலாபத்தை ஈட்டி உங்கள் குடும்பம் மட்டும் இல்லாமல் உங்களை சுற்றி உள்ளவர்களும் வளர வாய்ப்புகள் உண்டு. நீங்கள் உங்கள் குடும்பம் முன்னேற வேன்டும். உங்களுடைய சேமிப்பு உயர வேண்டும். வாழ்வாதாரம் மேம்படுத்த வேண்டும். உங்களுடைய பொருளாதாரம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் நபார்டு வங்கியின் மூலம் நமது மாவட்டத்திற்கு 2023-2024-ம் ஆண்டிற்கு ரூ.3442 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மகளிர் திட்ட அலுவலர் பழனி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் அனீஸ், தாட்கோ பொது மேலாளர் சுசீலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %