வரும் 1ந்தேதி முதல் டிஜிட்டல் கரன்சி குறிப்பிட்ட சில நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய ரிசர்வ் வங்கி அறித்துள்ளது.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் பரிசோதனை அடிப்படையில் முதல்கட்டமாக 4 நகரங்களில் இந்த டிஜிட்டல் கரன்சி திட்டத்தை மத்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வரும் டிசம்பர் 1ந்தேதி முதல் டெல்லி, மும்பை, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய 4 நகரங்களில் டிஜிட்டல் கரன்சி டோக்கன் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
பேப்பர் வடிவிலான ரூபாய் மற்றும் நாணய வடிவிலான ரூபாய் மதிப்புகளுக்கு இணையான மதிப்பில் இந்த டிஜிட்டல் கரன்சிகளும் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி முதல் கட்டமாக, எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎஃசி பர்ஸ்ட் வங்கி, ஆகிய 4 வங்கிகள் மூலம் டிஜிட்டல் கரன்சிகள் விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. பின்னர் தேவைக்கு ஏற்ப இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
சில்லரை வர்த்தகம், தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான பணபரிவர்த்தனை போன்றவற்றுக்கு டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்திக்கொள்ளலாம் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.