இமாச்சல் பிரதேசத்தில் ஆட்சி அமைப்பது யார் என்பதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் ஏற்கனவே பாஜகவே ஆட்சியில் இருந்து வரும் நிலையில் இரண்டிலும் ஆட்சியை தக்க வைக்க பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் குஜராத்தில் பாஜக மீண்டும் அமோக வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
அதே நேரம் இமாச்சல் பிரதேசத்தில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. கடந்த நவம்பர் மாதம் 12ந்தேதி அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இமாச்சல் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காலை 10 மணி நிலவரப்படி பாஜக 33 இடங்களிலும் காங்கிரஸ் 32 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இமாச்சல் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 35 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்கிற நிலையில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 44 தொகுதிகளை கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் இம்முறை அங்கு ஆட்சியை தக்க வைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் கடந்த 1980ம் ஆண்டிலிருந்து கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசும் பாஜகவும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
காலை 10 மணி நிலவரப்படி இமாச்சல் பிரதேசத்தில் ஆட்சி அமைப்பது யார் என்பதில் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.