0 0
Read Time:1 Minute, 42 Second

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஊழியர்கள் அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அடங்கிய ஜாக் கூட்டமைப்பினர் தங்களது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் இதில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற போராட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலககட்டிடத்தில் இருந்து தொலைதூரக் கல்வி இயக்கக கட்டிடம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஊழியர்கள் அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் கோஷங்களை எழுப்பினார்கள்.

மேலும் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்றால் நிறைவாக அடுத்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை ஜாக் கூட்டமைப்பினர் அறிவிப்பு செய்துள்ளனர் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஜாக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிவகுருநாதன் இணை ஒருங்கிணைப்பாளர்கள் மனோகரன் ரவி பழனிவேல் இளங்கோ உள்பட ஜாக் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %