செம்பனார்கோயிலில்
திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் பூம்புகார் எம்எல்ஏ வழங்கினார்
செம்பனார்கோயில், டிச.20:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயிலில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு பேராசிரியர் அன்பழகன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். அதைத்தொடர்ந்து 500 மாற்றுத்திறனாளிகளுக்கு 5 கிலோ அரிசி, போர்வை, 10 வகையான ஊட்டச்சத்து பொருட்கள் தென்னங்கன்று மற்றும் ரூ.500 உள்ளிட்ட ரூ.2000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இதில் மாவட்ட துணை செயலாளர்கள் மு.ஞானவேலன், செல்வமணி, ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், எம்.அப்துல்மாலிக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயபாலன், சித்திக், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ரவி, ஹர்ஷத், முத்து மகேந்திரன், வின்சென்ட், ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், மாவட்ட குழு உறுப்பினர் வெண்ணிலா தென்னரசு, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் இரா.செந்தில், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், ஆனந்த், கோபுராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நல விட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட 500 மாற்றுத்திறனாளிகளும் பேராசிரியர் அன்பழகன் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து, தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்