குத்தாலம், டிசம்பர்- 22;
மயிலாடுதுறை மாவட்டத்தில் நல்லாட்சி வாரம் 19-ஆம் தேதி முதல் ஆரம்பித்து 6 நாட்கள் வரை கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வரின் முகவரி துறை சார்பாக சிறப்பு குறைதீர் வாரம் கடைபிடிக்கப்பட்டது. குறைதீர் முகாமில் இன்று 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது குறை தொடர்பான மனுக்களை அளித்தனர். குத்தாலம் பொதுமக்களிடமிருந்து வந்த மனுக்களை மயிலாடுதுறை சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் கண்மணி பெற்றுக்கொண்டார்.
மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்படும் என்றும், 25.12.2022 வரையில் மனுக்கள் பெறப்படும் எனவும் தெரிவித்தார். முகாமில் பெறப்பட்ட மனுக்களில் பத்து மாணவ மாணவிகளுக்கு கல்வி
உதவி தொகைக்காண ஆணைகளும், இரண்டு நபர்களுக்கு வாரிசு சான்றுகளும், இரண்டு நபர்களுக்குநகல் பட்டாவும் துணை ஆட்சியரால் வழங்கப்பட்டது. முகாமில் வட்டாட்சியர் கோமதி, குத்தாலம் தனி வட்டாட்சியர் சண்முகம், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் பாபு, வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் பரமானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்