0 0
Read Time:3 Minute, 12 Second

தரங்கம்பாடி, டிசம்பர்- 26;
தமிழக கடலோர கிராமங்களை கடந்த 2004 -ஆம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிர் நீத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் உயிர் நீத்ததுடன், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். ஆழிப் பேரலை தாக்கியதன் 18-ஆம் ஆண்டு நினைவு தினமான டிசம்பர் 26 மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னூர்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு உள்ளிட்ட 26 மீனவ கிராமங்களிலும் மீனவர்கள் அந்தந்த மீனவ கிராம கடற்கரையில் கூடி சிறப்பு ஹோமங்கள் செய்து ஆழிப் பேரலையின் தாக்குதலில் உயிர் நீத்த தங்களது உறவினர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் நீராடினர்.

தொடர்ந்து கடலோர கிராம மக்கள் கருப்பு பேட்ச் அணிந்தவாறு ஊர்வலமாக சென்ற மீனவர்கள் ஆழிப் பேரலை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னம் மற்றும் நினைவிடத்தில் 18 ஆண்டுகளாகியும் மறையாத சோகத்தில் பூஜைகள் செய்து, அஞ்சலி செலுத்தி வழிபட்டனர்.

தரங்கம்பாடி, சந்திரபாண்டி, குட்டிஆண்டியூர், சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சிகளில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், பாஜக மாவட்ட தலைவர் அகோரம், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், திமுக ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல் மாலிக், பி.எம்.அன்பழகன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ஜனார்த்தனம், வி.ஜி.கண்ணன் மற்றும் கடலோரப் பகுதி பொதுமக்கள், மீனவ கிராமவாசிகள், அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கலந்துகொண்டு ஆழிப்பேரலை தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்கு கடற்கரையில் இருந்து ஊர்வலமாக சென்று சுனாமியால் உயிர் உயிர் நீற்தவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %