மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் நாகை விற்பனை குழு ஐவேலி, வேலம்புதுகுடி, பனங்குடி, கொத்தங்குடி, நல்லாடை உள்ளிட்ட பகுதிகளில் மயிலாடுதுறை ஒழுங்கு முறை விற்பனை கூட மேற்பார்வையாளர் பி.எம் பாபு தலைமையில் திறனைப் பிரச்சார விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
தலைமை அலுவலக பொறுப்பாளர் சிலம்பரசன், நாகை விற்பனை கூட மேற்பார்வையாளர் விக்ணேஷ் முன்னிலை வகித்தார். குத்தாலம் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சங்கர் ராஜா விவசாயிகளிடம் தேசிய மின்னணு வேளாண் திட்டம் மற்றும் பயன்கள் கூறித்து விளக்கி கூறினார். மேலும் விவசாயிகள் தங்களின் அனைத்து விதமான விவசாய விளைபொருட்களையும் விற்பனை கூடங்களில் விற்று இடை தரகர் இன்றி நல்ல விலை பெற்றிட விற்பனை கூடம் வந்து தேசிய மின்னணு சந்தையின் மூலம் பயன் அடைய அழைப்பு விடுத்தனர்.
மேலும், விற்பனை குழு அலுவலர்கள் ஆறுமுக ரவணன், எம்.முத்துக்குமரன், அகோரமூர்த்தி, மதியழகன் ஆகியோர் விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி பயன்கள் கூறித்து விளக்கினர். இந்த நிகழ்வில் விவசாய பிரதிநிதிகள் ரவி, அன்பழகன், சேகர், நாட்டாமை பன்னீர், கணேசமூர்த்தி, மணிகண்டன் மற்றும் பலர்கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை பரிமாரினர். முடிவில் விவசாயிகள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தே விளை பொருட்களை தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் பார்ம் டிரேடிங் முறையில் விற்பனை செய்வது குறித்து விளக்கப்பட்டது.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்