0 0
Read Time:2 Minute, 36 Second

இன்றைய இளைய சமுதாயத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்களின் பொழுது போக்காக ஆன்லைன் விளையாட்டுகள் இருந்தன. காலப்போக்கில் அதற்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டது. ஆன்லைன் சூதாட்டத்திற்காக கடன் வாங்கி விளையாடி அதனால் பணத்தை இழந்து நிறைய மக்கள் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறின

இதையடுத்து நாடு முழுவதும் ஆன்லைன் விளையாட்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் சார்பில் இந்த புதிய வரைவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு இந்திய முகவரிகள், விளையாடுவோரின் முகவரிகள் சரிபார்ப்பது அவசியம்.
பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் இடைத்தரகர்கள் ஆன்லைன் விளையாட்டில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.
ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக எழும் புகார்கள், குறைதீர்க்கும் முறையில் சரி செய்ய வேண்டும்.
இந்தியாவின் சட்டம் விதிமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுகள் நடைபெறவேண்டும்.
ஆன்லைன் விளையாட்டில் சூது வைத்து ஆடும் விளையாட்டுகளுக்குத் தகுதியான வயது தொடர்பான சட்டங்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %