0 0
Read Time:3 Minute, 31 Second

மயிலாடுதுறை கொள்ளிடம்: கொள்ளிடம் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர். கொள்ளிடம் பாலம் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1950-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் வழியாக சென்னை, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், கொள்ளிடம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த பாலத்தை முறையாக பராமரிக்காததால் அதன் உறுதி தன்மை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பாலத்தில் இருந்து மழைநீர் வெளியேறி செல்லும் குழாய்கள் அடைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் வெளியேற முடியாமல் பாலத்திலேயே தேங்கி நிற்கிறது. அடிக்க ஏற்படும் விரிசல் பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள தடுப்பு கம்பிகள் அமைந்துள்ள தூண்களும் சேதமடைந்துள்ளன. பாலத்தில் அடிக்க விரிசல் ஏற்பட்டு வருகிறது. விரிசல் ஏற்பட்ட பகுதியில் இரும்பு கம்பிகளை வைத்து சிமெண்டு வைத்து பூசிவிடுவதால், அது ஒரு சில மாதங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கிறது.

2 அல்லது 3 மாதங்களில் மீண்டும் விரிசல் ஏற்பட்டு இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. அப்போது பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். பெரிதாகி கொண்டே செல்கிறது இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் பாலத்தின் நடுவில் உள்ள விரிசல் தெரியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து வாகனங்கள் செல்வதால் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. பாலத்தில் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டால் அதை சரி செய்யும் பணி நடைபெறும் போது 2 அல்லது 3 மாதங்கள் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்படுவதாகவும், மீண்டும் சில மாதங்களில் பாலத்தில் விரிசல் ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் வேதனை தெரிக்கின்றனர். சீரமைக்க வேண்டும் தற்போது பாலத்தில் ஏற்பட்ட விரிசல் கடந்த ஒரு மாதமாக சரி செய்யப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாலத்தில் மீண்டும் விரிசல் ஏற்படாத வகையில் சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %