0 0
Read Time:2 Minute, 49 Second

மயிலாடுதுறையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 6 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடக்கிறது என மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தனியார்துறையில் வேலை தேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் வருகிற 6 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு- தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப் வளாகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முகாமில் மயிலாடுதுறை உட்பட பிற மாவட்டங்களிலிருந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.

இதில் 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., கலை மற்றும் அறிவியல் பயின்ற பட்டதாரிகள் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம்.

இணையதளத்தில் பதிவு

முகாமில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் வாயிலாக வழங்கப்படும் திறன் பயிற்சிகள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. எனவே விருப்பமுள்ள வேலைநாடுனர்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுனர்கள் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %