0 0
Read Time:4 Minute, 51 Second

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று மாலை 5 மணிக்கு வெளியிட்டுள்ளது. 

விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

விஜய்யின் வழக்கமான ஆக்‌ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி செண்டிமெண்ட் படமாக வாரிசு படம் உருவாகியுள்ளது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியாக உள்ளது. அண்மையில் வாரிசு திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு உளிட்ட பாடல்கள் யூடியூப் ட்ரெண்டிங்கில் இன்று வரை இடம்பிடித்துள்ளது.

இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வாரிசு திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் வழக்கமான ஆக்‌ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி செண்டிமெண்ட் படமாக வாரிசு படம் உருவாகியுள்ளது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியாக உள்ளது. அண்மையில் வாரிசு திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு உளிட்ட பாடல்கள் யூடியூப் ட்ரெண்டிங்கில் இன்று வரை இடம்பிடித்துள்ளது. வாரிசு திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தனது தந்தையில் பிஸ்னஸில் அவருக்கு ஏற்படும் சிக்கலையும், அதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை விஜய் எப்படி எதிர்கொள்கிறர் என்பதே படத்தின் மையக் கதையாக இருக்கும் என ட்ரெய்லரை பார்க்கும் போதே தெரிகிறது.

மேலும் படத்தில் நிரைய சண்டைக்காட்சிகள் விஜயின் துள்ளலான நடனம், விஜய்- ராஷ்மிகா இடையே உள்ள காதல் காட்சிகள் என பக்கா ஃபேமிலி எண்டர்டெயினராக வாரிசு படம் இருக்கும் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது.

குறிப்பாக ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ள விஜய் பேசிய வசனங்கள் இணையத்தில் வைராலாகி வருகிறது. குறிப்பாக எல்லா இடமும் நம்ம இடம் தான் என்ற வசனமும், கிரவுண்ட் மொத்தம் உன் ஆளுங்க இருக்கலாம்… ஆனா ஆடியன்ஸ் ஒருத்தன மட்டும் தான் பாப்பாங்க, அவன்தான் தான் ஆட்ட நாயகன் என்ற வசனமும், பவர் சீட்ல இருக்காது அதுல வந்து உட்காருன்ல ஒருத்தன் என்ற வசனமும் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

இந்நிலையில், நெல்லை ராம் முத்துராம் திரையரங்கில் சிறப்பு காட்சியாக வாரிசு திரைப்படத்தின் டிரைலர் 2 முறை திரையிடப்பட்டது. இதனை விஜய் ரசிகர்கள் பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகள் வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர். இதற்கிடையே வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியான 3 மணி நேரத்தில் 65 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %