0 0
Read Time:2 Minute, 37 Second

மயிலாடுதுறை, ஜன- 09;
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம், செங்கரும்பு மற்றும் அரிசி, வெள்ளம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்குவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனை நேற்று காலை சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகில் உள்ள காவேரி நகர் – 1 நியாய விலை கடையில் கூட்டுறவு, உணவு, மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட 2,81,030 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 31 கோடி செலவில்,ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூபாய் 1000 ரொக்க பணம் ஆகிய பொங்கல் பரிசு தொகுப்புகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வழங்கி தொடங்கி வைத்தார்.

நேற்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் 5 கிலோ எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் இராமலிங்கம் ஆகியோர் துவங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமல்ராஜ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜே. சேகர், மாவட்ட வழங்கள் அலுவலர் (பொ) அம்பிகாபதி, துணைப் பதிவாளர் (கூட்டுறவு) ராஜேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %