0 0
Read Time:2 Minute, 24 Second
 முக்கனி மனிதநேய அறக்கட்டளை மற்றும் வி . எல்.  பி . ஜானகியம்மாள் பெண்கள் உயர்நிலைப் பள்ளி இணைந்து  சுவாமி விவேகானந்தர் அவர்களின் 161 வது ஆண்டு பிறந்தநாள் விழா -  தேசிய இளைஞர் தின விழாவை முன்னிட்டு போதையை ஒழிப்போம்! கோவையை காப்போம்!! போதையை தவிர்! கல்வியால் நிமிர்!!   "போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி"  12/ 1/ 2023 காலை 9.30  மணிக்கு கோவை புதூர் பிரிவில் துவங்கி வி. எல். பி . ஜானகியம்மாள் பெண்கள் உயர்நிலைப் பள்ளியை சென்றடைந்தது.
      விழாவிற்கு முக்கனி மனிதநேய அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஓ. இஸ்மாயில் தலைமையேற்றார். போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு சி.  அய்யாசாமி அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி வி. திருச்செல்வி அவர்கள் அனைவரையும் வரவேற்றவர். சுவாமி விவேகானந்தர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு டாக்டர் பாரதி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    முக்கனி மனிதநேய அறக்கட்டளை செயலாளர் எஸ்.குமார்,  ஆர்.முகமது யூசுப், கே.நிவேதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவர் டாக்டர் மா.சிவக்குமார்,  அகல் பார்த்திபன்,  தோழமை அறக்கட்டளை நிறுவனர் பிரியதர்ஷினி தங்கராஜ், நேதாஜி பசும்பொன் அறக்கட்டளை நிறுவனர் எம்.  சீனிவாசன் என்.  குப்புராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
    போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் பள்ளி ஆசிரியர்கள்,  200 க்கும்  மேற்பட்ட மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %