மடப்புரம் :ஜனவரி-13
மயிலாடுதுறை மாவட்டம்,செம்பனார் கோவில் ஒன்றியம்,மடப்புரம் ஊராட்சியில் பொங்கலின் முக்கியத்து வத்தையும்,பண்டிகை சாராம்சங்களையும் நம் தமிழர் பண்பாடான சமூக நல்லிணக்கம்,மனிதநேயத்தை பேணி காக்க ஊராட்சி மன்ற தலைவர் மெஹராஜ் செல்வநாயகம் தலைமையில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
ஊராட்சி செயலர் U.வெங்கடேசன் வரவேற்றார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோவி.மனோகரன்,G.மனோகரன்,சித்ரா ரவி,கீதா பாஸ்கரன், மதினாபீவி ஷாஜஹான், அருள்மொழி விவேகானந்தன், அமுதா ஆறுமுகம், விஜயகுமாரி முன்னிலை வகித்தனர்.
அனைவர்களும் ஒன்று கூடி பொது இடத்தில் தங்களுக்குள் சமத்துவ உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
நிகழ்வில் சுகாதார பணியாளர்கள்,தூய்மை காவலர்கள், பணி தளப் பொறுப்பாளர்கள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குனர்கள், ஊராட்சி பணியாளர்கள், இரயிலடி பகுதி பிரமுகர்கள் K.அருள்மேரி ரோக்,S.நெடுஞ்செழியன்,P.பாபு மற்றும் ஊராட்சி மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஊராட்சி மன்ற துணை தலைவர் வடிவுக்கரசி அசோகன் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
செய்தியாளர்:க சதீஷ்மாதவன்