செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 100 குவிண்டால் நெல் ரூ.2¼ லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது. மயிலாடுதுறை பொறையாறு: செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 100 குவிண்டால் நெல் ரூ.2¼ லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. இதல் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது நெல்லை விற்பனைக்கு வைத்திருந்தனர். மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் நெல்லை ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் 100 குவிண்டால் நெல் ரூ.2 லட்சத்து 25ஆயிரத்துக்கு ஏல முறையில் கொள்முதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து நாகை விற்பனை குழு செயலாளர் ரமேஷ் கூறுகையில், விவசாய விளை பொருட்களான எள், நிலக்கடலை, சோளம், கம்பு, ராகி, மக்காசோளம், தேங்காய், முந்திரி, மிளகாய், சோயா பயறு, உளுந்து ஆகியவற்றை நாகை விற்பனை குழுவில் இயங்கும் செம்பனார்கோவில், குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம், திருப்பூண்டி, கீழ்வேளூர், நாகப்பட்டினம் ஆகிய விற்பனை கூடங்களுக்கு விவசாயிகள் எடுத்து வந்து நல்ல விலைக்கு விற்பனை செய்து பயன் பெற வேண்டும் என்றார்.