0 0
Read Time:2 Minute, 37 Second

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா களம் இறக்கப்பட்டார். அவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்த நிலையில் கடந்த 4ந்தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு அடுத்த மாதம் 27- ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளையும் தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது. ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கிய நிலையில், அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனே அமலுக்கு வாட்நத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.1800 425 94890 என்ற இலவச தொடர்பு எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் சுழற்சி முறையில் பணியாளர்கள் இதில் இருப்பார்கள் எனவும், வரும் புகார்களை பறக்கும் படைக்கும், தேர்தல் அதிகாரிக்கும் தெரிவிப்பார்கள் எனவும் தேர்தல் அலுவலர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %