மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, மேலமங்கை நல்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ வலம்புரி விநாயகர் மற்றும் ஸ்ரீ அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் கடந்த 23ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை உடன் துவங்கியது. தொடர்ந்து ஸ்ரீ தேவதாளுக்கே விக்னேஸ்வர பூஜை எஜமான சங்கல்பம் ஸ்ரீ மகா கணபதி ஹோமம் ஸ்ரீ மஹாலஷ்மி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றது. காவிரியின் கிளை நதியான வீரசோழன் ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து புனித கடங்களில் நிரப்பப்பட்டு கும்ப அலங்காரம் கலா ஆகர்சனம் யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கியது.
தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன இதனை அடுத்து யாக சாலையில் மகா பூர்ணகதியும் மகா தீபாராதனையும் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க புனித கடங்களில் வைக்கப்பட்ட நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலய கோபுர கலசத்திற்கும் அதனைத் தொடர்ந்து திரௌபதி அம்மன் ஆலய கோபுரத்திற்கும் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து கருவறையில் விநாயகர் மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. விழாவில் திரளான கிராம மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்