மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (27.01.2023) மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையிலிருந்து காணொலிகாட்சி வாயிலாக கொள்ளிடம் வட்டாரம், அளக்குடி கிராமத்தில் அனைவருக்கும் நல வாழ்வுத்திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தை இன்று திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா.இ.ஆ.ப., மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்
செ.இராமலிங்கம் , பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்
திரு.எம்.பன்னீரசெல்வம் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா.இ.கா.ப.,
மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவலர் உமாமகேஸ்வரி சங்கர், பூமி தொண்டு நிறுவன பங்களிப்பு இணை நிறுவனர் கே.கே.பிரகலாதன், என்.டி.டி (லிமிடெட்) துணைத் தலைவர் கே.என்.முரளி, மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் என்.செல்வராஜ், மயிலாடுதுறை ஒன்றியக்குழுத் தலைவர் காமாட்சிமூர்த்தி, இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகஸ்) மரு.குருநாதன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு. குமர குருபரன், முதன்மை தலைமை மருத்துவர் மரு.செந்தில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரவிக்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராமா ஆகியோர் உடன் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்