0 0
Read Time:3 Minute, 2 Second

மக்கள் நீதி மய்யம் வலைதளம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதால் மக்கள் நீதி மய்யம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாகா அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் கூட்டனி கட்சியினரை சந்தித்து தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டி மரியாதை நிமித்தமாக சந்திப்புகளை நடத்தினார்.

இதன் ஒருபகுதியாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான் கமல் ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவினை கோரினார். அதன் பின்னர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடத் தேர்தலில் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார்.

இதன் பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில்
”மக்கள் நீதி மய்யம் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க இருப்பதாக
பதிவிடப்பட்டது” . இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் ”மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் விஷமிகளால்
ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின்
இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்” என மக்கள் நீதி மய்யம்
தெரிவித்திருந்த நிலையில் இன்றைய தினம் மக்கள் நீதி மய்யம் சார்பில்
வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் அர்ஜுனர் கொடுத்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது..

”மக்கள் நீதி மையம் கட்சியின் வலைதள பக்கம் ஹேக் செய்யப்பட்டதில் அரசியல் சதி
இருக்கிறது. எங்களை நேரடியாக தாக்க முடியாதவர்கள் மறைமுகமாக ஹேக் செய்து தாக்க நினைக்கிறார்கள். யார் யார் மீது சந்தேகம் இருக்கிறது என்ற பட்டியலை புகார்
மனுவில் கொடுத்துள்ளோம் காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக
தெரிவித்துள்ளனர்” மாநிலச் செயலாளர் அர்ஜுனர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %