நாகப்பட்டினம் மாவட்ட ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அ.தி.அன்பழகன் மற்றும் பா.இரவி தலைமையில் நேற்று ( 29.01.23 ) மாலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் ப.அந்துவன்சேரல், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் சா.சித்திரா, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில துணைப் பொதுச்செயலாளர் பா.இரவி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் புயல் சு.குமார், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்டச் செயலாளர் க.நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக அ.தி.அன்பழகன் ( மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்) பா.இரவி ( மாநில துணைப் பொதுச்செயலாளர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்), அமிர்தலிங்கம் ( மாவட்டச் செயலாளர், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), வெ.சரவணன் ( மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்), வீ.இராஜராஜன் ( தமிழக தமிழாசிரியர் கழகம் ) ஆகியோரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட இணைச் செயலாளர் மு.காந்தி மாவட்ட நிதிக் காப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஜாக்டோ – ஜியோ மாநில முடிவின்படி 12.02.23 அன்று மாவட்ட அளவில் போரராட்ட ஆயத்த மாநாடு நாகையில் நடத்துவது எனவும், 05.03.23 அன்று மாவட்ட அளவிலான உண்ணாவிரத போராட்டத்தை நாகை அவுரித்திடலில் நடத்துவது எனவும், 24.03.23 அன்று மாநில அளவிலான மனிதச் சங்கிலி போராட்டத்தை நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறப்பாக நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட நிதிக் காப்பாளர் மு.காந்தி நன்றியுரையாற்றினார்.
செய்தியாளர்:க சதீஷ்மாதவன்