0 0
Read Time:5 Minute, 2 Second

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ளது. 1. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு (12 முதல் 19 வயது வரை) கபடி, தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து, சிலம்பம் (சாய் விளையாட்டரங்கம், ராஜன்தோட்டம்), நீச்சல், மாவட்ட விளையாட்டரங்கம், நாகப்பட்டினம்) மேசைப்பந்து,(துரோணாலயா அகடாமி, சீர்காழி) இறகுபந்து (ஷரஃப் இறகுப்பந்து அகாடமி), மட்டைப்பந்து (மினி ஸ்டேடியம், காட்டுச்சேரி) மற்றும் வளைகோல்பந்து (விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சீர்காழி) ஆகிய போட்டிகள் 06.02.2023 முதல் 09.02.2023 வரை நடைபெறும்.

  1. கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு (17 முதல் 25 வயது வரை) கபடி, தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து, சிலம்பம், (சாய் விளையாட்டரங்கம், ராஜன்தோட்டம்) நீச்சல், (மாவட்ட விளையாட்டரங்கம், நாகப்பட்டினம்) மேசைப்பந்து.(துரோணாலயா அகடாமி, சீர்காழி) இறகுப்பந்து (ஷரஃப் இறகுப்பந்து அகாடமி), மட்டைப்பந்து (மினி ஸ்டேடியம், காட்டுச்சேரி) மற்றும் வளைகோல்பந்து (விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சீர்காழி) ஆகிய போட்டிகள் 09.02.2023 மற்றும் 10.02.2023
  2. பொதுப்பிரிவினர் ஆடவர் மற்றும் மகளிருக்கு (15 முதல் 35 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம், கையுந்துபந்து(சாய் விளையாட்டரங்கம், ராஜன்தோட்டம்), இறகுபந்து, (ஷரஃப் இறகுப்பந்து அகாடமி) மற்றும் மட்டைப்பந்து(மினி ஸ்டேடியம், காட்டுச்சேரி) ஆகிய போட்டிகள் 13.02.2023 மற்றும் 14.02.2023
  3. மாற்றுத் திறனாளிகள் ஆடவர் மற்றும் மகளிருக்கு (வயது வரம்பு இல்லை) மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீ ஓட்டம் மற்றும் இறகுபந்து போட்டிகளும், பார்வைத்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம் அடாப்டட் வாலிபால் போட்டிகளும், மனவளர்ச்சி குன்றியோருக்கு 100 மீ ஓட்டம், எறிபந்து போட்டிகளும், செவிதிறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம், கபடி போட்டிகள் 15.02.2023 அன்று சாய் விளையாட்டரங்கம், ராஜன்தோட்டம் மயிலாடுதுறையில் நடைபெறவுள்ளது.

5.அரசு ஊழியர்கள் ஆடவர் மற்றும் மகளிருக்கு (வயது வரம்பு இல்லை) கபடி, தடகளம், கையுந்துபந்து,(சாய் விளையாட்டரங்கம், ராஜன்தோட்டம்) இறகுபந்து,(ஷரஃப் இறகுப்பந்து அகாடமி) மற்றும் செஸ் (சில்வர் ஜூபிளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மயிலாடுதுறை) ஆகிய போட்டிகள் 22.02.2023 (ம) 23.02.2023 நடைபெறவுள்ளது. மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் தனிநபர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களும், குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். எனவே, மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள், மற்றும் பொது மக்கள் அதிக அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார். மேலும் தகவலுக்கு 7401703459 என்ற கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %