தரங்கம்பாடி,பிப்.5: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் வட்டாரத்தில்15,700 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அண்மையில் பெய்த மழையால் சுமார் 3405 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பாதிக்கப்பட்டது, உளுந்து, பயறு 4500 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் 3800 ஹெக்டேர் பரப்பளவில் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி வட்டம் நல்லாடை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெல், உளுந்து, பயறு விளைநிலங்களை தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மை இயக்குனர்,ஆ. அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் அரசு அலுவலர்கள் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் உடன் இருந்தனர்.
படவிளக்கம்: தரங்கம்பாடி வட்டம் நல்லாடை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் மற்றும் உளுந்து, பயறு விளைநிலங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர்
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்