0 0
Read Time:3 Minute, 31 Second

வளரும் நாடுகள், சிறிய செயற்கைக்கோள் உருவாக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும்
தனியார் நிறுவனங்களின் செயற்கை கோள்களை பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில்
செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இஸ்ரோ எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்களை உருவாக்க தொடங்கியுள்ளது. இஸ்ரோ சார்பாக இதுவரை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட் மூலம் அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிலையில் எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்கள் 500 கிலோவிற்கு குறைவான செயற்கை கோள்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எஸ்எஸ்எல்வி – டி2 ராக்கெட் இன்று காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இஸ்ரோவின் இஓஎஸ்-07(EOS-07), அமெரிக்க நிறுவனமான அன்டாரிஸ் ஜானுஸ்-1 மற்றும் சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் விண்வெளி நிறுவனத்தின் ஆசாதிசாட்-2(AzaadiSAT-2) என மூன்று செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டில் இடம்பெற்றுள்ளன.

175.2 கிலோ எடை கொண்ட மூன்று செயற்கைக்கோள்களை புவி வட்ட சுற்றுப்பாதையில் 450 கிலோமீட்டர் உயரத்தில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணில் பாய்ந்த அடுத்த 15 (900 நொடி) நிமிடங்களில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

புவிகண்காணிப்பு, தொலைத்தொடர்பு மேம்படுத்துதல் மற்றும் அளவீச்சு கதிர்களை அளவிடுதல் போன்ற பயன்பாடுகளுக்காக செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஸ்எஸ்எல்வி – டி1 ரக ராக்கெட் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. ஆனால் சென்சார் செயலிழப்புகள் காரணமாக செயற்கைக்கோள்கள் செயல்படாமல் போனது. விரைவில் மேம்படுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி – டி2 ராக்கெட் உருவாக்கப்பட்டு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் அப்போது அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 9.18 மணிக்கு எஸ்எஸ்எல்வி – டி2 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது . செயற்கைக்கோள்களை பூமியின் சுற்றுப்பாதையில் 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு குறைவாக நிலைநிறுத்த எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட்களை இஸ்ரோ உருவாக்குகிறது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %