வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்காவிட்டால் பான் கார்டு ரத்து செய்யப்படும் என மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வரி சட்டம் 1961-ன் படி ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டியது கட்டாயம். வரும் மார்ச் 31-ம் தேதியுடன் இதற்கான காலக்கெடு முடிவடைகிறது. அப்படி இணைக்காவிட்டால் வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் பான் கார்டு செயலிழந்துவிடும். அதன் பிறகு பான் கார்டை எந்த பரிவர்த்தனைக்கும் பயன்படுத்த முடியாது. அதனால் இன்றே ஆதாருடன் பான் கார்டை இணையுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
பான் கார்டு செயலிழந்து போனால் அந்த நபர் வரிமானவரி ரிட்டனை தாக்கல் செய்ய முடியது. ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டதும் செயல்படுத்தமுடியாது. அதுமட்டுமல்லாமல் அதிக வரி பிடித்தம் செய்யவும் வாய்ப்பு உள்ளது.
ஆன்லைன் மூலம் ஆதார் – பான் கார்டு இணைப்பது எப்படி?
http://www.eportal.incometax.gov.in அல்லது http://www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று உங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பான் எண் அல்லது ஆதார் எண் பயனர் ஐடியாக இருக்கும். பாஸ்வேர்டு உங்களுடைய பிறந்த நாளாக இருக்கும்.
அதன்பிறகு திரையில் வரும் லிங்கை க்ளிக் செய்தால், முகப்பு பக்கத்துக்கு செல்லும். பிறகு ஆதாருடன் பான் இனைப்பது என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
பான் எண் மற்றும் ஆதார் எண்ணை டைப் செய்து ஆதார் கார்டில் உள்ள உங்கள் பெயரைக் குறிப்பிட வேண்டும்.
பிறகு ஆதாருடன் பான் கார்டு இணைக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட செய்தி கிடைக்கும்.