5 1
Read Time:2 Minute, 12 Second

மத்திய பட்ஜெட் வெளியானதை தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடி சரிவை கண்டுள்ளது. இன்றைய தங்கத்தின் நிலவரம் குறித்து விரிவாக பார்ப்போம்.
தங்கம் விலை:

மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இருப்பினும் வெளி நாட்டினரும், உள் நாட்டினரும் தங்களின் சேமிப்பு பணத்தை தங்கத்தின் மீது தான் அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

அந்த வகையில், கடந்த 9ம் தேதி அன்று தங்கத்தின் விலை என்றும் இல்லாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.43000க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து படிப்படியாக தங்கம் விலை குறைந்து, நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,640 விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடி சரிவை கண்டுள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,315க்கு விற்பனையாகிறது. இதே போன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.42,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் வெள்ளியின் விலையும் இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.72க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.72,000க்கும் விற்பனையாகிறது.

Happy
Happy
24 %
Sad
Sad
11 %
Excited
Excited
2 %
Sleepy
Sleepy
1 %
Angry
Angry
59 %
Surprise
Surprise
4 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “விலை சரிந்த தங்கம்.. இன்று நகை வாங்கினால் செம லாபம்! – இன்று என்ன நிலவரம்?

Comments are closed.