சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்திற்கு அதிகாரப்பூர்வ ஆளுநர் வருகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்டம் 2981 ன் ஆளுநர் வி. செல்வநாதன் வருகை தந்து ரோட்டரி சங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை கலந்து ஆலோசித்தார்.நிகழ்ச்சியில் சிதம்பரம் சுற்றுப்பகுதியில் உள்ள 10 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இன்டர்ராக்ட்
மற்றும் ரோட்ராக்ட் எனப்படும் மாணவர்கள் அடங்கிய ரோட்டரி சங்க குழுக்கள் துவக்கப்பட்டு ஹம் கவர்னர் கரங்களால் பதாகைகள் வழங்கப்பட்டன. மேலும் கண் தானம் செய்த குடும்பத்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர். கடலூர் மாவட்ட கண் தான சங்கத் தலைவர் லயன் ராமச்சந்திரன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். சங்கத்தின் புதிய உறுப்பினர்களுக்கு ரோட்டரி உதவி ஆளுநர் ரோட்டரி தீபக் குமார் பின் அணிவித்தார். சங்கத்தில் சிறப்பாக செயல்பட்ட 25 ஆண்டுகள் பணியாற்றிய ரொட்டேரியன்கள்ய கவர்னர் மூலம் மூத்த ரோட்டேரியன் மோகன் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டனர்.
சிதம்பரம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ரத்தின சபேசன் பொருளாளர் செயலாளர் கனகவேல் சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க செயலாளர் முனைவர் ஹெச் மணிகண்டன் சங்க பொறுப்பாளர்கள்,
சிதம்பரம் சிதம்பரம் விட்டான் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும்
உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் சாசனத் தலைவர் ஞான அம்பலவாணன் அவர்கள் தலைமையில் செய்திருந்தனர். விழாவில் இறுதியில் செயலாளர் முனைவர் சின்னையன் நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி