0 0
Read Time:3 Minute, 31 Second

இந்திய சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் பங்கேற்பதற்கு முன்பாக தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.1913 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரையும் எதிர்த்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இப்போராட்டத்தில் தமிழர்கள் பலரும் பங்கேற்றனர். அவர்களில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த தில்லையாடி வம்சாவழியை சார்ந்த வள்ளியம்மையும் ஒருவர். தனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டியவர் தில்லையாடி வள்ளியம்மை என்று காந்தியடிகள் நினைவு கூர்ந்துள்ளார். 1913 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க சிறையில் அடைபட்ட வள்ளியம்மை, 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் உயிர்நீத்தார்.

காந்தியால் நினைவு கூறப்பட்ட தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிக்கபட்டது. இதனை முன்னிட்டு, தில்லையாடியில் அமைந்துள்ள வள்ளியம்மை நினைவு மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனார்.

இந்நிகழ்வில் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல், மாவட்ட ஒன்றிய உறுப்பினர் துளசிரேகா ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, வட்டாட்சியர் புனிதா, தில்லையாடி ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கராஜ், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் தில்லையாடி வள்ளியம்மை உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.

மேலும், மணிமண்டத்தில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்று ஆவணங்கள், புகைப்படங்கள், ஓவியங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு அவற்றின் விளக்கத்தை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவை போற்றும் விதமாக தில்லையாடியிலிருந்து மயிலாடுதுறை வரையிலான தியாகச்சுடர் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %