மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் / சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர்.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல். கோரி 67 மனுக்களும், வேலை வாய்ப்பு கோரி 32 மனுக்களும், முதியோர். மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகைகோரி 53 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 38 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கி கடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 30 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 8 மனுக்களும், மொத்தம் 228 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1.65 லட்சம் மதிப்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் ஃபோன் மற்றும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு மடக்கு சக்கர நாற்காலியும், மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ஒரு பயனாளிக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் பெட்டிக்கடை வைக்க ஆணையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.55,000 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரமும் ஆக மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.2,45,650 மதிப்பில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சோ. முருகதாஸ். தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் இ.கண்மணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எஸ். முத்தமிழ்செல்வன் மாவட்ட வழங்கல் அலுவலர் சி. அம்பிகாபதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்