0 0
Read Time:2 Minute, 44 Second

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுயுடன் நிறைவடைகிறது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இது தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில் வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது தவிர விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

மின் நுகர்வோர்கள் குறித்த முறையான தகவல்களை பெறும் நோக்கில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. அதன்படி, கடந்தாண்டு நவம்பர் 15ம் தேதி முதல் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டது. டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. எனினும் இந்த காலக்கெடுவிற்கும் ஏராளமானவர்கள் மின் இணைப்பு எண்ணை இணைக்காததால் இதற்கான கால அவகாசம் பிப்ரவரி 28ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதுவரை 99 சதவீதம் பேர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மீதம் இருக்கும் ஒரு சதவிகிதம் பேரையும் இணைப்பது பற்றி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பு வைத்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. நுகர்வோர்களை நேரில் சந்தித்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு வலியுறுத்தவும் மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %