0 0
Read Time:2 Minute, 55 Second

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்.27ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில், 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். இது 74.79 சதவீதமாகும். இதுதவிர வாக்குப்பதிவுக்கு முன்பே 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுகள் பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 27ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

மொத்தம் 15 சுற்றுகளாக நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில், தொடக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்று வந்தார். நான்கு முனைப் போட்டியாக தொடங்கிய இத்தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், 15வது சுற்றின் முடிவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,04,501 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 41,638 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 10,337 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 1,383 வாக்குகளும் பெற்றனர். இதன்மூலம் சுமார் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %