மயிலாடுதுறை மார்ச்-14: மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான நிதியளிப்பு பொதுக்கூட்டத்திற்கு வருகைதந்த கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அவர் அளித்த பேட்டியிலிருந்து…. பாராளுமன்றத்தில்
துறைவாரி நிதி ஒதுக்கீடு தொடர்பாக திங்களன்று துவங்கிய கூட்டத்தில் ஹிண்டன் பார்க் நிறுவன அறிக்கையின்படி அதானி நிறுவனம் மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் இதற்கு ஆளும் பாஜக அரசு அனுமதி மறுத்து கடும் அமளியோடு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானியை பாதுகாப்பதற்காகவே பாஜக அரசு இதுபோன்று நடந்து வருகிறது.
பாஜக ஆளாத மாநிலங்களில் அரசை கவிழ்ப்பதற்கும், சீர்குலைக்கவும் ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை ஆளுநர் மூலம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஆளுநர் இதுவரை 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
ஆன்-லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்டத்தில் கையெழுத்திட்ட தமிழக ஆளுநர் ஆர்.என் .ரவி அதன் மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளார் .இரண்டு ஆண்டுகளில் இதுவரை 44 பேர் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் ஆளுநருக்கு அதைப் பற்றி கவலை இல்லை. ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களின் குடும்பத்தை அழைத்துப் பேசாமல் சூதாட்டத்தை நடத்துகின்றவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி மசோதாவை கையெழுத்திடாமல் திருப்பி அனுப்புகிறார்.
திருச்சி குமர வயலூர் முருகன் கோயிலில் பிராமணர் அல்லாத இரண்டு அர்ச்சகர்களை தமிழக அரசு நியமனம் செய்தது. இதனை ஆகம விதிக்கு எதிரானது என உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.என மார்க்சிஸ்ட் வலியுறுத்துகிறது.
சுங்கச்சாவடி கட்டணத்தை 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக ஆக உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 32 காலாவதியான டோல்கேட்டில் பணம் வசூல் செய்யப்படுவதை தடுத்து காலாவதியான டோல்கேட்டுகளை உடனடியாக மூட வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் இடங்களில் குடியிருப்போர் மற்றும் குத்தகை விவசாயம் செய்பவர்கள்,அந்த இடங்களில் கடை வைத்து தொழில் செய்பவர்கள் நலனை பாதிக்கும் வகையில் அரசு செயல்படக் கூடாது கோயில் இடத்தில் உள்ள கடைகளில் பகுதி கட்டுவதை வாடகையாக மாற்றி கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தொகையை செலுத்தச் சொல்வது சரியான முறை அல்ல. இதனை விசாரித்து வரும் குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை மக்களுக்கானது அல்ல அது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கானது உரம் மானியம், மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளது 100 நாள் வேலை திட்டத்துக்கான மானியம் பாதியாக குறைத்து விட்டனர். மேலும் கல்வி சுகாதாரம் ஆகியவற்றுக்கான மானியங்களும் குறைக்கப்பட்டுள்ளன.என்று பேட்டியளித்தார் மேலும் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கும் மோடி ஜனநாயகத்தை பற்றிபேசுகிறார். ஒன்றிய அரசு கட்டுப்பாட்டிலுள்ள சிபிஐ , தேசிய புலனாய்வு முகமை,அமலாக்கத்துறை போன்றவற்றை எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறது.சிபிஐ,அமலாக்கத்துறை போன்றவைகளை அதானிக்கு எதிராக பயன்படுத்துவதற்கு தயாராக இல்லை.என கடுமையாக விமர்சித்து பேட்டியளித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், டி.சிம்சன், சி.விஜயகாந்த், நகர பொறுப்பு செயலாளர் சி.விஜயகாந்த் , அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வ.பழனிவேலு, சிஐடியூ இராமானுஜம், ஆசிரியர் சங்க லீலாவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்