0 0
Read Time:2 Minute, 40 Second

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆணையின்படி, 18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

விதிகளை மீறிய 18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்தது. விடைத்தாள் மதிப்பீடு, முறையாக கணக்கு சமர்பிக்காத புகாரில் தேர்வு முடிவுகளை வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், 18 கல்லூரி மாணவர்களின் நலன் கருதி தேர்வு முடிவுகளை இன்றே வெளியிட வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக உயர்கல்வித்துற வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று சில பொறியியல் கல்லூரிகள் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழகத்தால் கீழ்கண்ட காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது. விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்களை அனுப்ப மறுத்து ஒத்துழைப்பு அளிக்காதது மற்றும் ஏற்கெனவே 4 பருவ தேர்வுகளுக்காக பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முன்பணத்துக்கு சரியாக கணக்கு தராதது உள்ளிட்ட காரணங்களால் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது மாணாக்கர்களின் நலன் கருதி இன்றே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்ற அமைச்சர் ஆணையின்படி, மேற்கண்ட 18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும். கல்லூரிகள் செய்த தவறுக்கு அக்கல்லூரிகளின் மீது அண்ணா பல்கலைக்கழகத்தால் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %