செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அர்ஜுணன் இறப்பிற்கு உதவி செய்யும் வகையில் காக்கும் கரங்கள் சார்பில் 7 லட்சத்து 22 ஆயிரத்து 500 ருபாய் நிதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் வழங்கிய போலீசார்.:-
மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தலை சோந்தவர் அர்ஜுணன் இவர் செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். பணிமுடித்து வீடு திரும்பிய அர்ஜுணன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் காவல்துறையில் 1993ம் ஆண்டு பேட்சில் பயிற்சிபெற்று பணியில் சேர்ந்ததை அடுத்து அவரது குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில் தமிழ்நாடு போலீஸ் 1993 பேட்ச் சார்பில் உருவாக்கப்பட்ட காக்கும் கரங்கள் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள போலீசார் அளித்த 7 லட்சத்து 22 ஆயிரத்து 500 ருபாய் நிதியை போலீசார் இன்று அவரது குடும்பதினரிடம் வழங்கினர்.
இறந்த அர்ஜுணனின் மகள் சாருமதியிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா காக்கும் கரங்கள் சார்பில் போலீசார் அளித்த நிதியை காசோலையாகவும் பணமாகவும் வழங்கினார். போலீசார் இறந்தால் அவரது குடும்பத்திற்கு உதவிசெய்யும் வகையில் பணியாற்றக்கூடிய காவலர்கள் தங்கள் பங்களிப்பில் இவ்வளவு பெரியதொகையை திரட்டி வழங்கியுள்ளது பாராட்டுக்கூறியது. இதுபோல் பணியின் போது இறக்கும் காவலர் குடும்பங்களுக்கு தொடர்ந்து உதவிசெய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுகொண்டார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்