தரங்கம்பாடி, மார்ச்- 16;
மயிலாடுதுறை அருகே நான்கு வழிச்சாலைக்காக வீடுகளை இழந்தவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதற்காக திமுக பிரமுகர் ஆக்கிரமித்து இருந்த இடத்தை வருவாய்த் துறையினர் ஆர்ஜிதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் முதல் நாகை வரை 180 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழி சாலை அமைப்பதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மேற்பார்வையில் சாலை அமைக்கும் பணியை துரிதமாக செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த நான்கு வழிச்சாலை கொள்ளிடத்தில் தொடங்கி தரங்கம்பாடி வரை 44.5 கிலோமீட்டர் தொலைவிற்கு செயல்படுத்தப்படுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 188 ஹெக்டர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் பணியை முடிக்க வேண்டும் என்ற நிலையில் தற்போது நில ஆர்ஜிதம் முழுமை அடையாததால் சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகா மாமாக்குடி ஊராட்சி அப்பராசபுதூர் பகுதியில் நான்கு வழி சாலைக்காக வீடு இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது.
அதற்காக அப்பராசபுதூர் கிராமத்தில் மாமாகுடி ஊராட்சி மன்ற தலைவர் விஜயாவின் கணவர் கோபி ஆக்கிரமித்து வைத்திருந்த அரசுக்கு சொந்தமான 75 குழி இடத்தை சீர்காழி ஆர் டி ஓ அர்ச்சனா முன்னிலையில் டிஎஸ்பி லாமேக் தலைமையில் பொறையார் காவல் நிலைய ஆய்வாளர் சிங்காரவேல் பாதுகாப்புடன் ஆரஜிதல் செய்யும் பணி நடைபெற்றது. இதனை அறிந்து அங்கு வந்த கோபி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்புடன் ஜேசிபி எந்த நிலை கொண்டு கம்பி வேலிகளை அகற்றி கோபி ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு புறம்போக்கு நிலத்தை ஆர்ஜிதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்