0 0
Read Time:2 Minute, 40 Second

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 – 24ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.

இந்நிலையில், 2023 – 24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளார். காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார். 2 மணி நேர உரை கடந்த சில ஆண்டுகளாகவே காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த முறையும் அவ்வாறே தாக்கலாகிறது. மேஜையின் மீது வைக்கப்பட்டுள்ள மடிக்கணினியை பார்த்து, அவர் பட்ஜெட் உரையை வாசிக்கிறார். உறுப்பினர்களும் தங்கள் முன்னால் வைக்கப்பட்டுள்ள மடிக்கணினியில் பட்ஜெட் உரையை பார்த்து தெரிந்து கொள்வார்கள்.

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என கூறப்படுகிறது. குறிப்பாக, திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம், பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம், புதிய தடுப்பணைகள் மற்றும் தொழில் பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %