சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், குமாரமங்கலம் ஊராட்சியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு குமாரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.ரேவதி சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட கழக இணை செயலாளர் ரங்கம்மாள், கிள்ளை பேரூராட்சி செயலாளர் தமிழரசன், பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், ஊராட்சி மன்ற தலைவர்கள் சௌந்தர்ராஜன், தியாகராஜன், முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர்கள் ராஜசேகரன், கந்தசாமி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து பேசுகையில்,
“சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், குமாரமங்கலம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் சேதமடைந்து இடிந்து விடும் சூழ்நிலையில் உள்ளதால் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்க் தர வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என்னிடத்திலே கோரிக்கை வைத்தார்கள். அவர்களது கோரிக்கையினை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 17.5 லட்சம் நிதி ஒதுக்கி புதிய பள்ளி கட்டிடம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. புதிய பள்ளி கட்டிடத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தேன். இன்றைக்கு இரண்டு வகுப்பறைகள் கொண்ட பள்ளிக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்றார்”.
இதில் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் கலா நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி