0 0
Read Time:2 Minute, 0 Second

கொரோனா தீநுண்மியின் இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ளது. இதனால், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒருபகுதியாக வரும் 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது. இதையொட்டி, சனி, ஞாயிற்றுக்கிழமை (மே 8, 9) இரவு 9 மணி வரை அனைத்து விதமான கடைகளும் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும், பொதுமக்கள் சனிக்கிழமை காலை முதலே அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக வீதிகளில் குவிந்தனா். இதனால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், கடந்த 3 நாள்களாக மூடப்பட்டிருந்த பல்வேறு நிறுவனங்கள், நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள் ஆகியவை சனிக்கிழமை திறக்கப்பட்டிருந்ததால் வணிக பகுதிகள் களை கட்டியது. அதே நேரத்தில், திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்படும் பொதுமுடக்கத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்ற அறிவிப்பு முக்கியமானது. இதனால், மதுப் பிரியா்கள் மதுப் புட்டிகளை வாங்கி சேமித்து வைப்பதற்கு ஆா்வம் காட்டினா்.

இதனால், கடலூா், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி உள்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள சுமாா் 150 டாஸ்மாக் கடைகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்த மதுபானங்களை மொத்தமாக வாங்கிச் சென்றனா். சிலா் பெட்டிகளில் மொத்தமாக வாங்கி அதை தலையில் சுமந்து சென்றனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %