ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துவிட்டீர்களா?.வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் எப்படி இணைப்பது..?
வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கடைசி தேதியை மார்ச் 31, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம், பயனர்கள் தங்களது வாக்களர் அடையை ஆதாருடன் ஆன்லைனில் அல்லது எஸ்எம்எஸ் மூலமாக மார்ச் 31, 2024க்குள் இணைத்துக் கொள்ளலாம்.
வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்க வேண்டியது கட்டாயமில்லை. ஆனால் ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பதிவு செய்வதை அடையாளம் காணவும், அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஒருவர் வாக்களிப்பதை கண்டறியவும் ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் முறைகேடுகளைத் தவிர்க்க, ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்குகள் பதிவு செய்வதை தடுக்க இந்த செயல்முறை உதவும். 2021ம் ஆண்டு மக்களவையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் இணைப்பு கட்டாயம் இல்லை என்றாலும், வாக்காளர் விருப்பத்தின்பேரில் இணைத்துக் கொள்ளலாம்.
வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் எப்படி இணைப்பது..?
– தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கமான nvsp.in பக்கத்துக்கு செல்ல வேண்டும்
-இணைய பக்கத்தின் முகப்பில் உள்ள வாக்காளர் பட்டியலை தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும்
– அதன் பிறகு பயனர்கள் தங்களது வாக்காளர் அடையாள விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
– இதன் பின்னர் Feed Adhaar No எனும் தேர்வு வலது பக்கத்தில் காணப்படும், அதைக் கிளிக் செய்து விவரங்களையும் ஆதார் எண்ணையும் பதிவிட வேண்டும்.
– ஆதார் எண்ணில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு OTP வரும்.
– OTP ஐ கேட்கப்பட்ட தளத்தில் பதிவு செய்த பின் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது குறித்த அறிவிப்பு திரையில் தோன்றும்.