0 0
Read Time:3 Minute, 11 Second

கடலூா் மாவட்டத்தில், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின் தடையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். கடலூர் கன்னியாகுமரி முதல் மராட்டியம் வரை தரையில் இருந்து மேலடுக்கு வரை 2 காற்றும் ஒன்றாக சேர்ந்து வருவதால் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன் படி கடலூர் மாவட்டத்தில் பரவலாக விட்டு, விட்டு மழை பெய்தது.

கடலூரில் நேற்று மாலை குளிர்ந்த காற்று வீசியது. ஆனால் மழை இல்லை. அதேவேளை திட்டக்குடி, பெண்ணாடம், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. மின் தடை பரங்கிப்பேட்டை, புவனகிரி, பி.முட்லூர், புதுச்சத்திரம், கிள்ளை, கீரப்பாளையம், புதுச்சத்திரம், வடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

இந்த மழையால் கிள்ளை, வடலூர், புவனகிரி, பி.முட்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். அரசு பொதுத்தேர்வுக்கு படித்து வரும் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். பின்னர் படிப்படியாக மின்சாரம் வினியோகம் செய்யும் பணி நடந்தது. இருப்பினும் இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ராமநத்தம் ராமநத்தம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதனால் ராமநத்தத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் சாலையின் ஓரமாக இருந்த பாதாம் மரம், பெரங்கியம் குடியிருப்பு அருகே வேப்பமரம் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. பின்னர் மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மரங்களை அப்புறப்படுத்தி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பகுதியில் பெய்த மழையால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %