0 0
Read Time:3 Minute, 41 Second

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு பிச்சாவரம் ஊராட்சியில் அ.இ.அ.தி.மு.க கொடியேற்று விழா – .மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ ஏற்றி வைத்தார்


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றியம், பிச்சாவரம் ஊராட்சி, வடக்கு பிச்சாவரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு புதிதாக நிறுவப்பட்டுள்ள கொடிமரத்தில் கழக கொடி ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். கழக அம்மா பேரவை துணை செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.எஸ்.அருள், மாவட்ட கழக அவை தலைவர் எம்எஸ்என் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் க.திருமாறன், அகஸ்தியன் பவுண்டேஷன் ஈஸ்வர் ராஜலிங்கம், மாவட்ட இணை செயலாளர் எம்.ரங்கம்மாள், துணைச் செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கிளைக் கழக செயலாளர் ஆதிமூலம் வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில் மாவட்ட பாசறை செயலாளர் டேங்க்.ஆர்.சண்முகம், இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி, பொதுக்குழு உறுப்பினர் சிவ.சிங்காரவேல், கூட்டுறவு வங்கி தலைவர் ஜெ.வசந்த், தலைமை கழக பேச்சாளர் தில்லை செல்வம், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் பன்னீர்செல்வம், குமராட்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுந்தரமூர்த்தி, பரங்கிப்பேட்டை முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் முனிவண்ணன் பேரூராட்சி கழக செயலாளர்கள் மாரிமுத்து, தமிழரசன், உத்திராபதி மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் முருகேசன், சிதம்பரம் நகர துணை செயலாளர் அரிசக்திவேல், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சித்ரா பாலசுப்பிரமணியன், இளவரசி ஆனந்தன், தாமரைச்செல்வி ராஜேந்திரன், ஆனந்த ஜோதி சுதாகர்,
நிர்வாகிகள் கோவிந்தராஜ், எள்ளேரி பிரபு, செங்குட்டுவன், வீரமணி, ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ், ரங்கசாமி, சௌந்தர்ராஜன், ஜெயா, சேட்டு, ஆனந்தன், தனசிங்கு, தெய்வீகன், பழனிவேலு, பாலமுருகன், பக்கிரிசாமி, ஸ்ரீதர் டேங்க் சந்தோஷ், வெங்கடேசன் மற்றும் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிர்வாகி சக்கரபாணி நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %