மயிலாடுதுறை, மார்ச் 28:
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை கோறிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என அதிரடியாக தீர்ப்பளித்தது. இதனை அடுத்து பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கவும் கோர்ட் மறுத்துவிட்ட நிலையில் பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதனிடையே எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை அடுத்து மயிலாடுதுறையில் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் சந்தோஷ் குமார், ஜனார்த்தனன், வி.ஜி.கண்ணன், மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் நாஞ்சில் கார்த்தி, மாவட்ட பேரவை செயலாளர் சங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பிரேம்குமார், நகர செயலாளர் செந்தமிழன் மற்றும் கோமல் அன்பரசன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்