0
0
Read Time:1 Minute, 4 Second
மேல்புவனகிரி ஒன்றியம் பின்னலூர் கிராமத்தில் சுப்பிரமணியசாமி கோவில் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதையடுத்து வருஷா பிஷேக பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு சுப்பிரமணிய சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாதவன் பத்மாவதிமற்றும் விழா குழுவினர், அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி