தரங்கம்பாடி, ஏப்ரல் 8;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் காசிம் ரைஸ்மில் உரிமையாளர் பாவாசா அகமது என்பவர் பொரையாறில் இயங்கி வரும் மனிதநேய அரவனைப்பு இல்லத்தில் பல ஆண்டுகளாக ஆதரவற்றவர்களு தேவையான அனைத்து உதவிகளும் செய்து வருகிறார். மேலும் அங்கு யார் இறந்தாலும் இறந்தவரின்
மத முறைப்படி நல்லடக்க சேவை செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இஸ்லாம் மதத்தை சார்ந்த ஆதரவற்ற சிக்கந்தர்பீவி (80) என்பவர் 8 ஆம் தேதி மதியம் உயிரிழந்தார். அவருக்கு அவரது மதப்படி மனிதநேய அரவணைப்பு இல்லத்தில் இருந்து தரங்கம்பாடி பள்ளிவாசலுக்கு எடுத்துச் சென்று ஊர் ஜமாத்தார் மற்றும் இஸ்லாமிய நண்பர்கள் உதவியுடன் பாவாசா அஹமது சிக்கந்தர்பீவியை நல்லடக்கம் செய்தார்.
மேலும் பாவாச அகமது மனிதநேய அரவணைப்பு இல்லத்தில் இருந்து சென்ற ஆண்டு சம்சுதீன் என்ற இஸ்லாமியர் ஒருவர் இறந்தார் அவரை அவரது மத முறைப்படி நல்லடக்கம் செய்தார். அதேபோல் கடந்த ஜனவரி மாதம் அன்று ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் அவரை இந்து முறைப்படி பாவாசா அகமது குடும்பத்தார்கள் மற்றும் நண்பர்களுடன் அடக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாவாசா அகமதுக்கு அவரது குடும்பத்தார்கள் உறுதுனையாக இருந்து இச்சேவை செய்து வருவதை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்